Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அதிகார பறிப்பை தடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கமுதி வட்டார ஊராட்சி தலைவர்கள் மனு..

அதிகார பறிப்பை தடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கமுதி வட்டார ஊராட்சி தலைவர்கள் மனு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம்,  கமுதி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வி.பெரியசாமி, செயலர் கே.நாகரத்தினம், பொருளாளர் கே.டி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் அளித்த மனு:

கடந்த 2016 முதல் 2019 வரை தனி அலுவலர்களால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், 14 வது நிதிக்குழு மானிய நிதி உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகள் தேர்வு செய்தல், ஒப்பந்த புள்ளி கோருதல் உள்ளிட்ட பணிகளை கிராம ஊராட்சிகள் அடங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் தற்போது பணியாற்றி வருவதால் தனி அலுவலர் பதவி காலாவதி ஆகிவிட்டது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களில் கையொப்பம் இடும் அதிகாரம் இல்லாததால் உரிய முறையில் பணிகளை மேற்கொள்வதில் சிரமமாக உள்ளது. கையொப்பம் தேவை இல்லை என்பதால் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என மாவட்ட நிர்வாகம், ஒன்றிய அலுவலக அலுவலர்கள் கூறி வருகின்றனர். கடந்த காலங்களில் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக ஒதுக்கி நிதி ஆதாரங்கள் மூலம் சாலை பணி தேர்வு, டெண்டர், செயல்படுத்துதல் உள்பட அனைத்து பணிகளும் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்தது . ஆனால் 1994 ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கிய அதிகாரங்களை பறிக்கும் வகையில் ஊராட்சி கணக்குகளில் உள்ள 14 வது நிதிக்குழு மானிய நிதி, திட்ட நிதி, உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக ஒதுக்கிய நிதி மூலம் செய்யப்படும் ஊரணி மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கான டெண்டர் மாவட்ட வளர்ச்சி முகமை மூலம் பேக்கேஜ் முறையில் நடத்தப்பட்டு வருகிறது . இதன் மூலம் ஊராட்சித் தலைவர்களுக்கான அதிகாரம் பறிக்கப்படுவதுடன் டெண்டர் விடுவதிலும் பணிகள் மேற்கொள்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்பாக அமையக்கூடும் .

மக்கள் தேர்வு செய்த கிராம ஊராட்சி தலைவர்கள் மீது எந்தவித முகாந்திரம் இன்றி நோட்டீஸ் அனுப்புவது , பதவியை விட்டு நீக்கி விடுவதாக மிரட்டல் விடுப்பது போன்ற நிகழ்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். மக்கள் தேர்ந்தெடுத்த ஊராட்சி தலைவர்களின் மாண்பு, மரியாதை காக்கப்பட வேண்டியதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் , 14 வது நிதிக் குழு மானியம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கென நேரடியாக ஒதுக்கீடு செய்த நிதி மூலம் பணிகள் தேர்வு செய்தல் டெண்டர் விடுதல் போன்ற பணிகளை அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!