
கீழக்கரை தாலூகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வரிசை எண்கள் JRR •••• , WRM ••••, TN/34/202/ •••• ஆகிய வரிசையல் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் TN/34/202/•••• எண்கள் கொண்டு ஆரம்பமாகும் பழைய கருப்பு வெள்ளை வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு அந்த எண்களை நீக்கி மாற்றம் செய்து புதிதாக வண்ண அட்டைகளாக வழங்க உள்ளனர்.
இதற்காக கீழக்கரை தாலூகாவிற்கு 27ஆயிரம் வண்ண அட்டைகள் வந்துள்ளது. இதனை அப்பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் (BLO) மூலம் நேரிலோ, போன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் நொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம் என துணை வட்டாட்சியர் பரமன் தெரிவிக்கின்றார்.
தகவல் : மக்கள் டீம்