காதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஒரு இளைஞர் திடீரென  தனியார் செல்போன் கோபுரம் மீது ஏறியுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் காவல்துறையினர் கோபுரத்தின் மீது ஏறிய நபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது தான் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் என்றும் கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தான் காதலித்து வருவதாகவும் அதற்க்கு அரவது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அதனால் காதலியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி சுமார் 100 அடி உள்ள கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்தார்.

உடனடியாக கே.வி. குப்பம் காவல் ஆய்வாளர் முரளிதரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.இதனிடையே உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்களும் கோபுரத்தின் மீது இருந்து கீழே இறங்கும் முயற்சியை மேற்கொண்டனர்.மேலும் தற்கொலை முயற்சி செய்த ராஜபாண்டியனிடம் கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் முரளிதரன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். எதுவாக இருந்தாலும் தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே வருமாறு காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.

மேலும் தீயணைப்பு துறை வீரரும் கோபுரத்தின் மீது ஏறி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 அடி கோபுரத்திலிருந்து ராஜபாண்டி கீழே இறக்கினர் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு கீழே இறக்கப்பட்ட ராஜபாண்டி மயக்கநிலைக்கு சென்றார்.உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காதலூக்காக இளைஞர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image