மாவட்ட நிர்வாக ஆலோசனையின் பேரில் காய்கனி சந்தையை பள்ளி வளாகத்தில் ஒதுக்கித்தந்து உதவிய வத்தக்குண்டு பேரூராட்சி நிர்வாகம்!

மாவட்ட நிர்வாக ஆலோசனையின் பேரில் காய்கனி சந்தையை பள்ளி வளாகத்தில் ஒதுக்கித்தந்து உதவிய வத்தக்குண்டு பேரூராட்சி நிர்வாகம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு காளியம்மன் கோவில் அருகே காய்கனி கடை சந்தை நடைபெற்று வந்தது. இங்கு கொடைக்கானல் மற்றும் வத்தக்குண்டு சுற்றுவட்டார பகுதியில் விளையும் காய்கனிகளை தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்துவாங்கித் சென்ற போதிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் மிக நெருக்கடியாக வந்து சென்றுகொண்டிருந்த இருந்த நிலையில் தற்போது நாட்டில் பரவிவரும் கொரொனா நோய்தொற்று காரணமாக 144 தடையுத்தரவு அமுலில் உள்ள சூழலில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் வத்தக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் நிலக்கோட்டை சாலையில் உள்ள சி எஸ் ஐ பள்ளி வளாக மைதானத்தில் மாற்றம் செய்து கோடுத்துள்ளது. இங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தினமும் காய்கனிகளை வாங்கிச் செல்வதோடு கொரொனா நோய்தொற்று பரவிவரும் காலத்தில் விசாலமான இடத்தை அமைத்துத்தந்து உதவிய மாவட்ட மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சந்தையில் கடை அமைக்கும் வியாபாரிகளும் சந்தைக்கு வந்துசெல்லும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal