வாசுதேவநல்லூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவளித்து உதவும் முஸ்லிம் நலச்சங்கத்தினர்…

வாசுதேவநல்லூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவளித்து உதவும் முஸ்லிம் நலச்சங்கத்தினர்…

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் முஸ்லிம் நலச் சங்கத்தின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு வாசுதேவநல்லூர் நண்பர்கள், வாசுதேவநல்லூர் முஸ்லிம் நலச்சங்கத்தின் சார்பில் ஏழை, எளிய, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்காக தினந்தோறும் 100 நபர்களுக்கு காலை, மதிய உணவு தயார் செய்து கொடுக்கப்படுகிறது.

இந்த உதவிகளை அறிந்த சிவகிரி தாசில்தார் மற்றும் வாசுதேவநல்லூர் VAO ஆகியோர் வாசுதேவநல்லூர் முஸ்லிம் நலச் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, வாசு சுற்று வட்டார பகுதியை சார்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கின்ற 6 குடும்பங்களுக்கு 10 நாட்கள் சமைப்பதற்கான மளிகை சாமான்கள், காய்கறிகள், அரிசி ஆகியவற்றை அம்மக்களுக்கு கொடுக்க கோரிக்கை வைத்தனர்.

தாசில்தார் அவர்களின் கோரிக்கையின் படி அந்த 6 குடும்பங்களுக்கு ரூ 8000 மதிப்பிலான பொருட்களை தாசில்தார், VAO ஆகியோர் முன்னிலையில் முஸ்லிம் நலச்சங்க நிர்வாகிகள் SBB பாதுஷா, செய்யது மஜித், அம்ஜத் கான், பாவா, ஆசிக் ஆகியோர் வழங்கினர். மேலும் வாஸ்து அளவு பகுதியில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று தங்களது இரு சக்கர வாகனங்களில் உணவுகளைக் கொண்டு சென்று நேரடியாக கொடுத்து மகிழ்கின்றனர்.

மேலும் அந்த நிர்வாகிகள் கூறுகையில், உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.மேலும் உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஏழை எளியவர்களுக்கு உதவியாக அவர்களுக்கு நாங்கள் உணவு வழங்க எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம் என்றனர். மேலும் இந்த அவசர கால நிலை தொடரும் வரையிலும், எங்கள் சேவையும் தொடரும். மக்களாகிய நீங்கள் எங்களுக்கு உதவுவதாக இருந்தால் உங்கள் பகுதியில், உங்கள் தெருக்களில் தேவையுடையோர் இருப்பின் அவர்களின் தகவல்களை மட்டும் பின் வரும் எண்களில் தொடர்பு கொண்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்பு எண்கள்:-

பாவா (பெஸ்ட் பேக்கரி)
-8248601803

ஆசிக் (இந்தியன் மொபைல்)
-8778000899

அம்ஜத் கான்(பிரிண்டர், பிளக்ஸ்) – 9789112858

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image