Home செய்திகள்உலக செய்திகள் ஆஸ்கார் விருது முதன் முதலாக அறிவிக்கப்பட்ட தினம்!! பிப்ரவரி 18, 1929

ஆஸ்கார் விருது முதன் முதலாக அறிவிக்கப்பட்ட தினம்!! பிப்ரவரி 18, 1929

by mohan

1929-ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி தான் முதல் அகாடமி விருது (ஆஸ்கர் விருது) வழங்கும் விழா நடந்தது. ஆஸ்கர் விருது உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 91 அகாடெமி விருதுகள் இது வரை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கர் விழாவை அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1927 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது 36 பேர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.அகாடெமி விருதில் வழங்கப்படும் பிரத்தேக தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது.

நடிப்புக்காக அதிக ஆஸ்கர் விருதை வென்றவர் அமெரிக்க நடிகையான கத்தரின் ஹெப்பர்ன். சிறந்த நடிகைக்கான விருதை இவர் நான்கு முறை வென்றுள்ளார்.மூன்று திரைப்படங்கள் அதிகபட்சமாக 11 பிரிவுகளில் அகாடெமி விருது வென்றுள்ளன. பென் ஹர் திரைப்படம் 1959 ஆம் ஆண்டு 12 பிரிவுகளில் போட்டியில் இருந்தது, அதில் 11-இல் வென்றது. டைட்டானிக் திரைப்படம் 1997-ஆம் ஆண்டு 14 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு 11-இல் ஜெயித்தது. கடைசியாக லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் – தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் திரைப்படம் 11 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு பதினோரு பிரிவிலும் விருதை வென்றது.

அதிகமுறை அகாடெமி விருது வென்ற பெண் எடித் ஹெட். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த எடித் எட்டு முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இந்த எட்டு முறையும் சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான பிரிவில் வென்றுள்ளார்.ஆஸ்கர் வரலாற்றில் இரண்டு விருதுகள் வாங்கிய ஒரே இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே. ஏ ஆர் ரஹ்மான் விருது வென்ற போது தமிழில் சில வார்த்தைகள் உதிர்த்தார். ஆஸ்கர் மேடையில் தமிழ் மொழி முதல்முறையாக ஒலித்தது அப்போதுதான். ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2009 ஆம் ஆண்டு இரண்டு பிரிவுகளில் ரஹ்மான் விருது வென்றார்.உலக சினிமாவின் முதன்மையான விருதாக இது கருதப்படுகிறது.

தகவல் : இரமேஷ், , நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!