திருநகரில் மூன்று மாதமாக சம்பளம் வழங்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா செய்ததால் பரபரப்பு.

திரு நகரில் உள்ள தனியர்மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று23.01.2020 மாலை பள்ளி வேலை நேரம் முடிந்தவுடன் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள், அலுவலர்கள்,ஊழியர்கள், உள்ளிட்ட 50க்கும் மேற்ப்பட்டோர் பள்ளியின் வாசல் முன்பு அமர்ந்து மூன்று மாத சம்பள பாக்கியை உடனடியாக வழஙகக்கோரி கோசமிட்டனர். சுமார் ஒரு மணி நேரமாகியும் அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் சம்பவ இடத்திற்கு வந்த திருநகர் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியார்கள் பள்ளி வளாகத்தினுள் அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மூன்று மாத சம்பள பாக்கியை வழஙகும் வரை போராட்டம் தொடரும் என கூறி மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை போரட்டத்தை தொடர்ந்தனர். இதனால் திருநகரில் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..