மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.

மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.!

மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 5 த்திற்கும் மேற்பட்ட இடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்,

இதில்
ராமேஸ்வரம் சாலையில் உள்ள போதி காம்பஸ் மற்றும் பொறியியல் கல்லூரி, அதே போன்று தூத்துக்குடி சாலையில் உள்ள ேவலம்மாள் மருத்துவக்கல்லூரி, சிபிஎஸ்சி பள்ளி, திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தல் கிரமடத்தில் உள்ள உறைவிடபள்ளி உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜி.எஸ்.டி உள்ளிட்டவை முறையாக செலுத்தவில்லை என்றும், வருமான வரி சரியாக கட்டவில்லை என்பது போன்ற புகாரின் அடிப்படையல் சோதனை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாராத்தில் தெரிவித்தனர்

மேலும் முக்கிய
ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும்
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சென்னை கொண்டு சென்று விசாரணை நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image