பள்ளி பருவத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் மாணவன்… பிறந்த நாளுக்கு மிட்டாய் கொடுப்பதை தவிர்க்க தாளாளர் வேண்டுகோள்…

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் முகம்மது சஜீர் தனது பிறந்த நாள் அன்று தமது பள்ளி நாலகத்திற்கு ஒவ்வொரு வருடமும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி வருகிறார்.
இந்த வருடம் தனது பிறந்த நாளை முன்னிட்டு 1000 ரூபாய் மதிப்புடைய புத்தகங்களை பள்ளி நாலகத்திற்கு தானமாக பள்ளி தாளாளரிடம் வழங்கினார். மாணவன் முகம்மது சஜீரின் சிறு வயது ஈக குணத்தை பள்ளியின் தாளாளர் வெகுவாக பாராட்டினார்.
இதுபற்றி இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் MMK முகைதீன் இப்றாகிம் கூறுகையில், “அந்த மாணவனை கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க காரணமாக இருக்கும் அவருடைய ஏழை தாயாரை நாம் இத்தருணத்தில் உண்மையிலேயே பாராட்டியாகவேண்டும், அதே போல் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பிறந்த நாளுக்கு தேவையற்ற செலவுகள் செய்யாமல் இது போன்ற புத்கங்களை நூலகங்களுக்கு வழங்கலாம், அதே போன்று ஆதரவற்றோர் இல்லங்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு உங்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். இது போன்ற நற்செயல்களால் நம் மாணவர்கள் சமூகத்தில் சிறந்து விளங்குவதுடன் இறைவன் உங்களது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கி அருள்புரிவான். வளமான எண்ணங்கள் நம்மை வளப்படுத்தும், நம் பிள்ளைகள் தூய எண்ணங்களோடும் நற்சிந்தனைகளோடும் வளர நாம் ஒன்றினைந்து செயல்படுவோம்” என்றார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image