ஒடிசாவில் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்..!

ஒடிசாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது. இந்த கெளரவ டாக்டர் பட்டமானது, கமல்ஹாசன் பல்லாண்டு காலமாக சினிமா, கலாசாரம் மற்றும் கலை ஆகியவற்றில் பங்களிப்பு செய்துவருவதை பாராட்டி வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளது.
இதனையொட்டி ஒடிசா சென்ற கமல்ஹாசன் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் நவீன் பட்நாயக் வழங்கி கௌரவித்தார்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..