வாளுடன் நடனமாடிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி..!

குஜராத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது

குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் பெண்கள் மேம்பாட்டு மன்றத்தின் சார்பில் கலாசார விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள், ‘தல்வார் ராஸ்’ எனறு அழைக்கப்படக்கூடிய குஜராத்தின் பாரம்பரிய நடனமான வாள் நடனம் ஆடினர்.

மாணவிகள் இரு கைகளிலும் வாள்களை ஏந்திக்கொண்டு நடனம் ஆடினர். இரு கைகளிலும் வாள்களை சுழற்றி நடனமாடுவது ஆபத்தானது என்றபோதிலும் மாணவிகள் நேர்த்தியாக ஆடினர்.

அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை மாணவிகளுடன் சேர்ந்து வாளுடன் நடனம் ஆடினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image