நெல்லையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி 14.11.19 இன்று நெல்லை சந்திப்பு இரயில்வே நிலையம் முன்பு தொடங்கி அரவிந்த் கண் மருத்துவமனை வரை நடைபெற்றது.பேரணியை காவல்துறை உதவி ஆணையாளர் திரு.சேகர் ( சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ) கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பேரணியில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை சார்பில் காவல்துறை சிறப்பு ஆய்வாளர் திரு.பாலசுப்பிரமணியன் கலந்து சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை அரங்கத்தில் உள்ள சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு அரங்கத்தை உதவி ஆணையாளர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மருத்துவமனை தலைமை மருத்துவர் R.மீனாட்சி DO.DNB சிறப்பாக செய்திருந்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

டிசம்பர் மாத இதழ்..

டிசம்பர் மாத இதழ்..