நாகமலை புதுக்கோட்டை அருகே சாலை ஓரம் உள்ள இரும்பு தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி மற்றொருவர் காயம்

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே சாலை ஓரம் உள்ள இரும்பு தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி மற்றொருவர் காயம் இன்று(13.08.19) காலை சேலத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நான்கு வழிச்சாலை நாகமலை புதுக்கோட்டை தனியார் பள்ளி அருகே வரும் பொழுது சாலை ஓரம் அமைந்துள்ள இரும்பு தடுப்பில் மோதியதில் சம்பவ இடத்திலேயே யுவராஜா என்பவர்பலியானார் .இவரது மனைவிக்கு திருமங்கலத்தில் குழந்தை பிறந்து உள்ளது குழந்தையும் மனைவியும் பார்ப்பதற்காக இவரும் இவரது உறவினரும் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் இரும்பு தடுப்பு சுவற்றின் மீது மோதி சம்பவ இடத்திலேயே யுவராஜா பலியானார் .. மற்றொருவா்  காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…

Be the first to comment

Leave a Reply