புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை இன்று(03.08.19) முதல் அமல்..!

புதுச்சேரி மாநிலத்தில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் (03.08.19)அமலுக்கு வந்தது..தமிழகத்தைப் போன்று புதுச்சேரியில், மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைத்தன. இதையடுத்து, சுற்றுச்சூழல் அமைச்சர் கந்தசாமி தலைமையில், பிளாஸ்டிக் வர்த்தகர் சங்கம், ஜவுளி சங்கம் மற்றும் உணவு விடுதி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பாலித்தீன் தூக்குப்பைகள், பிளைஸ்டிக் தட்டுகள் உள்ளிட்ட 10 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image