நிலக்கேட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம் ரூ.5 இலட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்…

வத்தலக்குண்டு அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் சந்தையூர் ஊராட்சி வடக்குவலையபட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாம் துவக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி தலைமை வகித்து 264 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 200 பேர் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களது செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர். மாவட்ட சமூக நல அலுவலர் முத்துமீனாள், நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வேதா, வட்ட வழங்கல் அலுவலர் சரவணவாசன், துணை தாசில்தார்கள் ராமசாமி, டேனியல், வருவாய் ஆய்வாளர் கோபி, கிராம நிர்வாக அதிகாரி மாணிக்கம், ஊராட்சி செயலர் பெரிச்சி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி
தளபதி சார்லி தொகுத்து வழங்கினார். முடிவில் வருவாய் கோட்டாட்சியர் உஷா நன்றி கூறினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனா்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image