உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து.

உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி விலக்கில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்தனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லத்தேவன்பட்டி விலக்கில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்று காற்று அதிகமாக வீசியதை தொடர்ந்து கன்மாய்கரை ஓரமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ஆட்டோவில் சென்றவர்கள் ஆண்டிபட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டியிலிருந்து பேரையம்பட்டிக்கு துக்கவீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த ஆட்டோவில் பாண்டியம்மாள், பஞ்சவர்ணம், பாப்பா, லட்சுமி, மாரியம்மாள், முத்துப்பாண்டி, தனலட்சுமி, நதினா (சிறுவர்) மற்றும் ஆட்டோ டிரைவர் சசிக்குமார் உட்பட 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 7பேர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..