திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு..ரூ 6 ஆயிரம் பெற மீண்டும் வாய்ப்பு..

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000/- வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கென திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் எதிர்வரும் 21.06.2019, 22.06.2019 மற்றும் 23.06.2009 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில் விவசாயிகள் தனியாக மனு எதுவும் அளிக்க தேவையில்லை.விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு கீழ்க்கண்ட விபரங்கள் : சர்வே எண், பட்டா எண், ஆதார் எண்,
வங்கி சேமிப்புக்கணக்கு எண், குடும்ப அட்டை எண்
மொபைல் எண் போன்றவைகளை சம்பந்தப் பட்ட கணக்கெடுப்பு பணியாளர்களிடம் / கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்துப் பயன் பெறலாம்.

மேலும், விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா அவர்களது தாய் அல்லது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளவும் மேற்படி முகாமில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் மேற்படி சிறப்பு முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி ரூ 6 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கு தேவையான விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மேற்கண்ட விபரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாட்ஸ்அப் எண்: 7598866000 க்கு அனுப்பி பயன்பெறலாம் எனவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் கேட்டுக் கொண்டுள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..