பள்ளிகல்வித்துறை மூலம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு பாடநூலில் தேசிய கீதத்தில் பிழை- கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி…

தமிழக அரசு அச்சிட்டு வழங்கியுள்ள பாட நூலில் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும் தேசிய கீதத்தில் பிழையாக அச்சிட்டிருப்பது கண்டு கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறை சார்பாக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறையே பிழையாக அச்சிட்டுள்ளதா? என கல்வியாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே பாடநூல் அச்சிடப்படுவதற்கு முன்பே பல கட்டங்களாக பிழை திருத்தும் பணியில் பலர் ஈடுபடுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் புத்தகம் அச்சிடும் பணி நடந்துள்ளது.

இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பாக 2-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கணக்கு சூழ்நிலையியல் பாடநூலில் தொகுதி 2ல் உள்ள தேசிய கீதத்தில் பிழை இருப்பதை கண்டு கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் அச்சிடப்பட்டுள்ள தேசிய கீதத்தின் இறுதியில் ‘ஜன கண மங்கள தாயக ஜயஹே’ என்பதற்கு பதிலாக ‘ஜன கண மன அதி நாயக ஜயஹே’ என தவறுதலுடன் அச்சாகி உள்ளது.

எனவே, இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிழையாக உள்ள தேசிய கீதத்தை மாற்றி பிழையற்ற தேசிய கீதத்தை அச்சிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பாட புத்தகங்கள் பல பள்ளிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..