மதுரையில் சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர் அடித்து கொலை…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள செங்கப்படை பகுதியை சேர்ந்தவர் சமயன். இவரது மகன் பாலமுருகன் (வயது 37). இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர்.

பாலமுருகன் கூலி வேலை செய்கிறார். மதுரை நகருக்குள் வேலை பார்த்து வந்த பாலமுருகன் இரவு நேரங்களில் பிளாட்பாரம், பஸ் நிலைய பகுதிகளில் தூங்குவது வழக்கம். நேற்று இரவு மதுரை மீனாட்சி பஜார் அருகில் உள்ள ரோட்டோர பிளாட்பாரத்தில் மனைவி, குழந்தையுடன் பாலமுருகன் தூங்கினார். அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (31) என்பவர் குடிபோதையில் அங்கு வந்தார்.

உறங்கி கொண்டிருந்த பாலமுருகனின் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்று இருக்கிறார். பிரச்சினை அதிகமானதால் மனைவி. சத்தம் போட்டதால் பாலமுருகன், கோபாலகிருஷ்ணனை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரடைந்த பாலமுருகன் கட்டையால் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் கோபாலகிருஷ்ணனை மீட்டு மதுரைஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திலகர் திடல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்

கீழை நியூஸுக்காக
மதுரை கனகராஜ்.

To Download Keelainews Android Application – Click on the Image

டிசம்பர் மாத இதழ்..

டிசம்பர் மாத இதழ்..