Home செய்திகள் இராமநாதபுரத்தில் 1,266 கிராமங்களுக்கு தினசரி தண்ணீர் விநியோகம் இல்லை..

இராமநாதபுரத்தில் 1,266 கிராமங்களுக்கு தினசரி தண்ணீர் விநியோகம் இல்லை..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில்  கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள், 2,306 குக்கிராமங்களுக்கு தினமும் 79.78 கன மில்லியன் லிட்டர் குடிநீர் தேவையென  கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி, காவிரி குடிநீர் திட்டம் கீழ் தினமும் 30 முதல் 35 கன மில்லியன் லிட்டர், ஊரக குடிநீர் திட்டம் கீழ் தினமும் 3 முதல் 6 கன மில்லியன் லிட்டர் அளவு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மக்களின் தேவைக்கேற்ப உறைகிணறு, ஆழ்துளைக்கிணறு, திறந்தவெளிக்கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் போன்ற பல்வேறு உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் 40.54 கன மில்லியன் லிட்டர் அளவில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய கோடை கால குடிநீர் விநியோக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பாண்டில் ரூ.12.9 கோடி மதிப்பில் 372 குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 2,306 கிராமங்களில் 1,040 கிராமங்களுக்கு தினமும், 565 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை,701 கிராமங்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் தொடர்பாக வாரந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவிரி குடிநீர் விநியோக குழாய்களில் முறைகேடான இணைப்புகள், குழாய்களை சேதப்படுத்துதலை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 305 முறைகேடான குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேடான குடிநீர் இணைப்புகள் மூலம் மக்களின் குடிநீர் விநியோகத்திற்கு இடையூறு செய்வோர் மீது சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.காவிரி குடிநீர் விநியோக குழாய்களின் வால்வுகளில் ஏற்படும் நீர்க்கசிவால் குடிநீர் வீணாகாமல் அதனை அருகே சேமிப்புத் தொட்டி ஏற்படுத்தி குழாய்கள் அமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழாய்களில் ஏற்படும் உடைப்புகள், கசிவுகளை உடனுக்குடன் சரிசெய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு1800 425 7040 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அயினான், ஊராட்சிகளின் உதவி இயக்குநர்  கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!