மதுரை பஸ் நிலையத்தில் திக்கு தெரியாமல் திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழிகாட்டிய செஞ்சிலுவை சங்கம்..

30-5-2019 வியாழன் கிழமை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிப்படைந்த பெண் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்துகளின் இடையில் நடமாடிக் கொண்டிருந்துள்ளார், அதை கவனித்த திருமதி ரமணி என்பவர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக் கிளைக்கு தகவல் அளித்துள்ளார்.

அத்தகவலின் அடிப்படையில் திரு.ராஜ்குமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அவரைப் பற்றிய தகவல் சேகரித்து அவரின் குடும்பத்தினரை கண்டு பிடித்து ஒப்படைத்திட முயற்சி மேற்கொண்டுள்ளார்.  அத்தீவிர முயற்சியின் பலனால் அப்பெண் மதுரை பெத்தானியாபுரம் பள்ளிகூட தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மனைவி என்பதும் இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.

பின்னர் அவரை சமூகநல பெண்கள் நல அலுவலர் திருமதி பிரேமாவின் உதவியோடு அப்பெண் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image