Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கணினி பிரிவில் 04.4.2019 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் நரேந்திர சிங் பர்மார், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப், ஆகியோர் முன்னிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட பணி நியமன ஒதுக்கீடு நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை சுமுகமான முறையில் நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தில் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொறுத்தவரையில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்பாளர்களும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட கணிணி முறை ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,364 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வு தள வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,615 வாக்குச்சாவடி அலுவலர்கள், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1,504 வாக்குச்சாவடி அலுவலர்கள், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,169 வாக்குச்சாவடி அலுவலர்கள், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,060 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேவை என கணக்கிடப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடி அலுவலர் 1, 2, 3 என முறையே பணி  நிர்ணயம் செய்வதற்கான முதற்கட்ட கணினி முறை பணி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து பணி ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட கணினி ஒதுக்கீடு 04.4.2019 அன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கணினி பிரிவில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில்ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் நரேந்திர சிங்  பர்மார், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர்  ஆனந்த் ஸ்வரூப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்வாறு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 07.04.2019 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி 17.4.2019 அன்று மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி,தேர்தல் வட்டாட்சியர்  திரு.முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!