Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்” – தூத்துக்குடி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்” – தூத்துக்குடி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

by ஆசிரியர்

தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து   திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின்  தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது  அவர் பேசுகையில் “வரும் ஏப்ரல். 18ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் மோடியை கெட் அவுட் செய்வோம்

நவம்பர் 2016ம் ஆண்டு இரவு ஊரே தூங்கிகொண்டு இருந்தபோது மோடிக்கு தூக்கம் வராமல் 500,1000,நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார் புதிய இந்தியா பிறக்கபோவதாக தெரிவித்தார் பிறந்ததா என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பிய அவர்  மேலும் தூத்துக்குடி திமுக தேர்தல் வாக்குறுதியில் ஸ்டெர்லைட் ஆலை போன்ற நச்சு ஆலைகள் வர அனுமதிக்க மாட்டோம் உப்பள,தீப்பட்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் திரேஸ்புரம் பகுதியில் தூண்டில் பாலம் சீரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யபட்டும் என்றார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையே பார்த்து இந்தியாவின் கதாநாயகன் என்கின்றார்கள் கதாநாயகன் என்று ஒருவர் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருப்பார் அவர்தான் மோடி . 

100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மக்கள் மீது இந்த எடப்பாடி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. மக்கள் போராட்டத்தில் அப்பாவி மக்களில் 13 பேரை பட்டப் பகலில் காக்கா, குருவியைச் சுட்டுக் கொல்வது போல சுட்டுக் கொன்றார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? மக்கள் போராட்டத்தில் திட்டமிட்டே கொலை செய்திருக்கிறது இரக்கமற்ற எடப்பாடி அரசு.

துப்பாக்கிச்சூடு குறித்து மீடியாக்களின் கேள்விக்கு, “ஆயிரம் பேரைக் கலைப்பதற்கு 13 பேரைச் சுட்டால் தவறில்லை. எங்கள் ஆட்சியில்தான் 35 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன. வேறு ஆட்சியில் இப்படிக் கிடையாது என்கிறார் இது ஒரு சாதனையா?” இப்படி, மனசாட்சி இல்லாமல் பதில் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி  ஒரு முதல்வரா? ஜி.எஸ்.டி., வரி அமலாக்கம், நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு ஆகியவைதான் முந்தைய பா.ஜ.க., ஆட்சியின் சாதனை. மோடியின் இந்தச் சாதனைகளைச் சொல்லி பா.ஜ.க., வேட்பாளரான தமிழிசை மக்களிடம் ஓட்டு கேட்கமுடியுமா?

கனிமொழியை எதிர்த்துப் போட்டியிடும் தமிழிசை டெபாசிட் இழக்க வேண்டும். வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்”

 திமுக, காங்கிரஸ் கூட்டணி 40தொகுதிகளிலும் வெற்றி பெரும்,ராகுல் காந்தி நிச்சயம் பிரதமராக வருவார் என்று கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!