புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட புல்பண்ணை சாலையை காணவில்லை-பொதுமக்கள் தவிப்பு..

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றினை காணவில்லை என போலிஸில் புகார் செய்வார். ஆனால் நிஜ வாழ்வில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட புல்பண்ணை சாலையை காணவில்லை என பொதுமக்கள் புகார் எங்கு கொடுப்பது என திணறி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ரோட்டின் நடுவே பாதாள சாக்கடை அடைப்பு திறந்தால் மழை இல்லை என 5 அடி உயரத்தில் மரத்தினை நடுரோட்டில் நட்டு வைத்து இருப்பதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்மந்தமாக நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது சாலை ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இந்த சாக்கடை மூடி திருச்சியில் ஆர்டர் செய்து இருப்பதாகவும் 15 நாள் சென்று தான் வரும் அப்போது தான் மாற்ற முடியும் கூறினர்.

நகராட்சி விழாக்களை மட்டும் ஒரே நாளில் ஏற்பாடு செய்ய முடிந்த ஆணையர், அதிகாரிகள், பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்க்க காலம் தாழ்த்துவது ஏன் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..