நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த மகனை ஊசி போட்டு கொன்ற செவிலியர் தாய்? போலிசார் விசாரணை..

வாணியம்பாடி ஜன 31 : வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி அக்ராகரத்தான் வட்டம் பகுதியை சேர்ந்த சந்தியா (20). இவருக்கும் தொட்டிகிணறு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 4 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு விரோஷன் (3) என்ற ஆண் குழந்தை இருந்த நிலையில் கருத்து வேருபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவனை பிரிந்த சந்தியா தனது தாய் வீட்டில் வசித்து வந்ததுள்ளார்.

சந்தியா திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில் சந்தியாவுக்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலன் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிள்ளையை விட்டு வா என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பெற்ற குழந்தைக்கே ஊசி போட்டு கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் திம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி: கே, எம்.வாரியார்
வேலூர்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image