பாலக்கோடு தக்காளி மார்கெட் முன்பு சென்டர் மீடியன் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்க்கு தினதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர். தக்காளி மார்கெட் முன்பு தான் பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு உள்ளது. இவ்வழியாக தினதோரும் தருமபுரியிலிருந்து பாலக்கோடு மார்கமாக ஓசூர் மற்றும் பெங்களூருக்கு ஆயிரக்கனக்கான கனராக லாரிகள், பேருந்துகளும்,சுற்றுலாதலமான ஒகேனக்கலுக்கு பெங்களுரு, ஓசூர், ராயக்கோட்டை, வெள்ளிச்சந்தை மாரண்டஅள்ளி போன்ற பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக வாகங்களை இயக்கி வருகின்றனர்.

தக்காளி மார்கெட் முன்பு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. மேலும் நகருக்குள் செல்லும் வாகனங்கள் மற்றும் புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றான முந்தியப்படியும் ஒரே வழியில் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படுவது மட்டுமின்றி அப்பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் , விபாரிகள் என சாலையை கடக்கவே பெரிதும் சிரம் அடைந்து வருகின்றனர்.

மேலும் தக்காளி மார்கெட் முன்பு பெரியவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்கவே சில மணிநேரம் காத்துகிடக்கும் சூழல் உள்ளது. இப்பகுதியில் சாலை விரிவாக இருப்பினும் சாலையை கடக்க பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வகாம் இப்பகுதியை விபத்து பகுதியாக கருதி தக்காளி மார்கெட் முன்பு சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- சிங்காரவேலு, தரம்புரி

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image