இலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை (இசிஆர்) சிக்கலில், பீடி சுருட்ட பயன்படும் இலை 1980 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டு பாம்பன் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது. இரண்டு சரக்கு வாகனங்களில் தலா 66 பண்டல் வீதம் 30 மூடை இருந்தது போலீசார் சோதனையில் தெரிந்தது.

கடத்தல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி பேரூரணி ஹரிகிருஷ்ணன் மகன ராஜேஷ்மார் 22 (டிரைவர்), பேரூரணி சமத்துவபுரம் உலகநாதன் மகன் மாரியப்பன் 27 (டிரைவர்),  வண்டியில் உடன் வந்த செல்லத்துரை மகன் கணேசன் 36 ஆகியோரிடம் சிக்கல் போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர். இக்கடத்தலுக்கு பயன்படுத்திய தூத்துக்குடி பதிவெண் ( டி.என் : 69) கொண்ட இரண்டு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..