கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய காவல் ஆய்வாளர் – பாராட்டிய பொதுமக்கள்..

திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மற்றும் ராதா தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்காக வெளியூர் சென்ற முருகன் திரும்பி வரவில்லை. இதனையடுத்து முருகனின் தாயார் கர்ப்பிணியான தனது மருமகள் ராதாவை வீட்டை விட்டு வெளியேற்றினர். தங்குவதற்கு இடமின்றி திரிந்த ராதாவை கண்ட வடமதுரை காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமிபிரபா மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.பாலமுருகன் ஆகியோர் தங்களது சொந்த செலவில் ராதா மற்றும் அவரது மகன் தங்குவதற்கு ஏற்பாடு செய்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவினர். பின்பு முருகனின் தாயாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரை வழங்கினர்.

மேலும் முருகன் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளரின் இந்த நற்சிந்தனையின் உதவியால் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றார்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Be the first to comment

Leave a Reply