Home செய்திகள் AIKSCC – அகில இந்திய விவசாய சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து தலைநகர் டெல்லியில் அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம்..

AIKSCC – அகில இந்திய விவசாய சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து தலைநகர் டெல்லியில் அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம்..

by ஆசிரியர்

மத்திய அரசின் பிரதமர் மோடி அவர்கள் இந்திய விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி செய்யாததை கண்டித்து அகில இந்திய 29 மாநில விவசாயிகள் சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து தலைநகர் டெல்லியில் உள்ள W-127, Greater Kailash-II New Delhi near Savitri cinema and Alpina Guest House என்ற இடத்தில் அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம் இன்று 04.01.2019 வெள்ளிக்கிழமை இன்று காலை10.30மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

கூட்ட முடிவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் AIKSCC Southindian Convenor மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P.அய்யாக்கண்ணு கலந்துகொண்டார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத மத்திய அரசை கண்டி வரும் ஜனவரி 29,30 ஆகிய தேதிகளில் அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதம் இருத்தல்.

2.பாராளுமன்ற தேர்தல் வரை விவசாயிகள் விவசாயத்திற்காக வங்கியில் வாங்கிய கடனுக்காக நகை, நிலம் போன்றவற்றை ஏலம் விடக்கூடாது.

3.வரும் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்கும் அமைப்புக்கே விவசாயிகள் வாக்களிக்க வேண்டும், அவ்வாறு இல்லாவிடில் விவசாயிகள் முற்றிலுமாக தேர்தலை புறக்கணிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த விபரங்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செய்தித் தொடர்பாளர் S. பிரேம்குமார் தெரிவித்தார்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!