அறிவோம் – கடனுதவியில் வாங்கிய வண்டியை, தவணை பணம் கட்ட தவறினால், வங்கி நிர்வாகம் வலுக்கட்டாயமாக திருப்பி எடுக்க கூடாது – டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், கடன் பெற்றவர், கடனை சரியாக கட்டவில்லை என்று, வங்கி, வலுக்கட்டாயமாக வண்டியை தூக்க கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கடன் ஒப்பந்தம் சிவில் காண்ட்ராக்ட் ஆகும், அதனால், சிவில் ரெமெடி மூலமே, அதாவது, நீதிமன்றம் மூலமே, வண்டி பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ICICI வங்கி எதிர் பிரகாஷ் கௌர் என்ற வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு இல்லாமல், வங்கி, கடன் வாங்கியவர் வீட்டுக்கு சென்று, வலுக்கட்டாயமாக வண்டியை பறிமுதல் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கை மெதுவாக இருக்கலாம் ஆனால், அதற்காக பைனான்சியர் அடியாட்களை வைத்து, கடன் கொடுத்ததற்காக, வண்டியை பறிமுதல் செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் CITI CORP MARUTI FINANCE LTD., என்ற வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

வலுவான சட்டம் இருக்கும் ஒரு நாகரீகமுள்ள சமூகத்தில், இப்படிப்பட்ட, உடனடி நீதி, என்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

நீதிமன்ற உத்தரவு உங்கள் பார்வைக்கு கீழே:-

Banking :
Muscleman or recovery agents of bank can not forcibly snatch away the vehicles from defaulting borrower.

It is held by the Hon’ble *Delhi State Consumer Disputes Redressal Commission*, New Delhi in case “Rakesh Verms versus Apple Finance Ltd.”, II 2009 CPJ 273 in para No. 3 as follows:-

Three identical cases we have taken a view which has been upheld by the National Commission in Revision Petition No. 737 of 2005 titled “”Citicorp Maruti Finance Ltd. versus S. Vijayalaxmi”, III 2007 CPJ 161 (NC) and

subsequently by the
Hon’ble Supreme Court in Appeal (Crl.) 267 of 2007 titled ICICI Bank Ltd. v. Prakash Kaur”, I (2007) CCR 53 (SC)-III (2007) SLT 1=II(2007) BC 504 (SC),

*That no financier/ Bank has authority to forcibly take possession of the vehicle as the loan* .

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர், கீழை நியூஸ்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal