கீழக்கரையில் தொலை தொடர்பு சம்பந்தமான நிறை குறைகளை தெரிவிக்க ஒரு வாய்ப்பு ..

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் TRAI – Telecom Regulatroy Authority of  India எனும் தொலை தொடர்பு ஆணையம் கீழக்கரைக்கு வருகின்ற 10.12.18 திங்கள் கிழமை வருகை தர உள்ளனர்.

அன்று மாலை 3.00 மணியில் இருந்து கீழக்கரை ஹீசைனியா மஹாலில் நடக்கவிருக்கும் நிகழ்வில் தொலை தொடர்பு சாதனங்களில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்களை பற்றி எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ குறைகளை கூறலாம்.

இந்நிகழ்வில் AIRTEL, JIO, VODAFONE, IDEA, BSNL மற்றும் இன்ன பிற அதிகாரிகளும் வர இருப்பதால் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இதுகுறித்து கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், அனைத்து சங்கங்கள், மற்றும் சமூக நல அமைப்புகள் சமூக அக்கறை கொண்டு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

தகவல் : மக்கள் டீம் :