வேலூரில் கொடிநாள் முன்னிட்டு ஊர்வலம்..வீடியோ..

வேலூர் அடுத்த காட்பாடியில் கொடி நாள் முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதில் காட்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் மாணவர்களின் கொடி நாள் ஊர்வலத்தை காட்பாடி வட்டாட்சியர் சதீஷ் கொடி அசைத்து துவக்கி வைத்து ஊர்வலமாக சென்றார்.

இந்த ஊர்வலம் ரயில் நிலையம், வழியாக சித்தூர் பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. இதில் துணை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

கே எம்.வாரியார், மாவட்ட செய்தியாளர்-வேலூர்

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..