Home செய்திகள் கின்னஸ் உலக சாதனையாளர் பட்டியலில் மாணவர்களின் பங்கு பெறுவதற்காக கருணையின் முக்கியத்துவத்தை விளக்க முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ஓவியபோட்டி….

கின்னஸ் உலக சாதனையாளர் பட்டியலில் மாணவர்களின் பங்கு பெறுவதற்காக கருணையின் முக்கியத்துவத்தை விளக்க முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ஓவியபோட்டி….

by ஆசிரியர்

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கின்னஸ் உலக சாதனையாளர் பட்டியலில் மாணவர்கள் பங்கு பெறுவதற்காக கருணையின் முக்கியத்துவத்தை இன்றைய நவீன உலகத்தில் மக்களுக்கிடைய விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கான ஓவியபோட்டி பள்ளி ஃ கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு.வீரராகவ ராவ் அவர்கள் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 5000 பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே மனித நேயம் பற்றிய எண்ணங்களை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமென்பதை இந்த ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன எனவும் இவர்களின் திறமையை பார்த்து நான் வியப்படைகிறேன் என்று இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டினார்.

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் தனது தலைமையுரையில் இன்றைய நவீன உலகத்தில் மாணவர்களுக்கிடையேயும், பொது மக்களிடமும் மனித நேயத்தையும்இ கருணை உள்ளத்தையும் சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் வளர்ப்பதால் அவர்கள் வருங்காலத்தில் நல்ல மனித நேயமுள்ளவர்களாக உருவாவது நமது நாட்டிற்கு அவசியமான ஒன்று எனவும் இதை தான் நமது ஏவுகணை நாயகன் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் மாணவர்ளிடம் எதிர்பர்த்தார் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்இ செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன்இ முஹம்மது சதக் தஸ்தஹீர் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர். நந்தகோபால், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் சர்வதேச அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஷேக்சலீம்,  கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியின் செயலாளர் ஜீவிதா கணேஷ கண்ணா, பாரதியார் கலைக்கூடம் முதல்வர் முனைவர் பிரபாகரன், உலக சாதனை பினாலே அமைப்பு நிறுவனர் முனைவர் ராஜேந்திரன்; ஆகியோர் கலந்து  கொண்டு சிறப்பித்தனர். கருணை பார்வையின் தூதுவர்களாக கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவர் சந்தோஷ்கண்ணா, நேஷனல் அகாடமி பள்ளியின் மாணவர்கள் கவின்கார்த்திக் மற்றும் சுதிக்ஷாஸ்ரீஇ முஹம்மது சதக் தஸதஹீர் பள்ளி மாணவி விஜயலட்சுமி, கீழக்கரை பியர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவன் செய்யது ஹக்பில் மரைக்காயர் மற்றும் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி இயந்திர பொறியியல் துறை மாணவன் செய்யது பாஷித் ஆகியோர் கருணையின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தனர்.

நன்றியுரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை பேராசிரியர் சாகுல் ஹமீது வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி கணினி பொறியியல் துறை பேராசிரியர் சேக்யூசுப், முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!