கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிகுலேசன் பள்ளியின் சார்பில் கஜா புயல் நிவாரண உதவி…

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடையநல்லூர், விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் ரூபாய் 20 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திரட்டப்பட்டு நிவாரண உதவிக்களத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிடம் வழங்கினர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் தாக்கத்தால் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதரமே அடியோடு பாதிப்பு அடைந்துள்ள நிலையில் தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்ரும் உதவிகரம் நீட்டி வரும் நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள கடையநல்லூர் விஸ்டம் மெட்டிகுலேஷன் பள்ளியின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, வகைகள், பாய்கள், பிஸ்கெட் தண்ணீர் கேன்கள், உள்ளிட்ட நிவாரண பொருட்களுடம் குழந்தைகளின் பாக்கெட் மணி ,உண்டியலில் சேகரித்த ரூபாய் 20 ஆயிரம் ஆகியவற்றை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் நிர்வாகிகள் குறிச்சி சுலைமான், சேஹனா,அப்துல்காதர் ,மைதீன் பிச்சை ஆகியோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல்கனி வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நகர் முழுவதும் வீதி வீதியாக வீடு வீடாக பொதுமக்களிடம் இருந்து நிவாரண பொருள்கள் பெற்று தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..