ஊரணி தூர் வாரும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் உத்தரவை ஊராட்சி பள்ளபச்சேரி அருகே மூங்கில் ஊரணி ( ஊற்று ஊரணி) உள்ளது. இதன் பரப்பு 25 ஹெக்டேர் ஆகும். கடந்த 2 தலைமுறைகளாக தூர் வாரப்படாதலும், காட்டு கருவேல் மண்டி கிடந்ததாலும் மூங்கில் ஊரணி இருந்த சுவடு தெரியாமல் போனது. இதனால் மழை காலத்தில் வீணாகும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த மூங்கில் ஊரணியை தூர் வார வேண்டும் என கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 2017 ஜன., 13ல் ராமநாதபுரம் மாவட்ட அரசிதழில் ஆணை வெளியானது. மாவட்ட வருவாய் அலுவலர் கடிதம், திருப்புல்லாணி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர், கனிம வள உதவி புவியியலாளரின் தல ஆய்வறிக்கை படி ஊரணியை தூர் வாரிக் கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் அக்.31 இல் உத்தரவிட்டார். இதன்படி ஊரணி தூர் வாரும் பணி பூமிபூஜை தொடங்கியது . பூமி பூஜை நிகழ்ச்சியில் தமிழக மக்கள் எழுச்சி கழக தலைமை ஒருங்கினைப்பாளர் ராஜேந்திரன் உள்பட 25 கிராம மக்கள் பங்கேற்றனர். இது குறித்து ராஜேந்திரன் கூறுகையில் , எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு நிதியில் ஊரணியை தூர் வாரிக் கொள்ள உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கு 25 கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், என்றார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.