இணையத்தில் பெண்கள் அவதூறு பரப்பிய அமெரிக்காவில் பணிபுரிந்த பரமக்குடி பொறியாளர் கைது…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காமராஜர் நகர் சகாயம் வயது,31, இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறார் . கடந்த சில ஆண்டுகளாக பரமக்குடி நகரின் முக்கிய பிரமுகர்களின் குடும்பப் பெண்கள் குறித்து இணையத்தில் சகாயம் அவதூறு கருத்துகளை பரப்பினார். இதனால் பாதித்த குடும்பத்தினர் பரமக்குடி போலீசில் புகார் கொடுத்தனர். இதன்படி தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் சகாயம் பரமக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சகாயம் பெங்களூர் விமான நிலையம் நேற்று வந்திறங்கினார். அவரை விமான நிலைய அதிகாரிகள் வரை கைது செய்து பரமக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி பரமக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு பின் முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர். சகாயம் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply