Home செய்திகள் இராமநாதபுரத்தில் நவராத்திரி விழா கோலாகலம்..

இராமநாதபுரத்தில் நவராத்திரி விழா கோலாகலம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி நவராத்திரி திருவிழா அக்.,9 இல் துவங்கியது. இதையொட்டி தினமும் இரவு அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பல வாகன வீதி உலா நடந்தது. தினமும் மாலை பரதம், சொற்பொழிவு, கிராமிய நடனம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விஜயதசமி நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு தங்க சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. பவாண வேடிக்கைகள் நடந்தது.

இராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயில் நவராத்திரி விழா அக்.,9இல் படி இறங்குதல் பூஜையுடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை, மாலை கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 10:00 மணிக்கு விஜயதசமி பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்பாள் புறப்பாடு நடந்தது.

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசேஷ திருமஞ்சனம், ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை 9:30 மணியளவில் நான்கு ரத வீதிகளில் குதிரை வாகனத்தில் ஆதிஜெகநாதர் உலா வந்தார். இதைபின் கோயில் பட்டாச்சாரியார் மூலம் நான்கு திசைகளில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது.

உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா நடந்தது. உற்சவர் சந்திரசேகரர் வில் அம்புடன் யானை வாகனத்தில் எழுந்தருளி, வேட்டை மண்டபம் முன்பு காலை 9:00 மணிக்கு அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரத்தில் மகர் நோன்பு திடலில் இரவு நடந்த திருவிழாவில் ஊர்வலமாக எடுத்துக் சென்ற அம்புகள் ராஜராஜேஸ்வரி அம்மன் மூலம் எய்யப்பட்டது.

இந்நிகழ்வின்  ஏற்பாடுகளை கடலாடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள வல்லியம்மன் கோயிலல் நவராத்திரி விழா நடந்தது. 10 நாட்களாக தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிறைவு நாளான நேற்று மாலை 4:00 மணியளவில் அம்மன், மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள வன்னிமரத்தை பக்தர்கள் 21 முறை சுற்றி வலம் வந்தனர். பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!