Home செய்திகள் ஆறாவது நாளாக தொடந்த மீனவர் போராட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம்.. வீடியோ..

ஆறாவது நாளாக தொடந்த மீனவர் போராட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம்.. வீடியோ..

by ஆசிரியர்

இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள தமிழக படகுகளை விடுவிக்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், உற்பத்தி விலைக்கே டீசல் வழங்குவதுடன், தற்போது வழங்கப்படும் மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தேவிபட்டினம், சோழியக்குடி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் 03.10.2018 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (08.10.18).6ஆவது நாளாக தொடர்ந்துள்ள நிலையில் ராமநாதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (அக்.8) அனுமதி கோரினர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தது.

இதையடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் போஸ். நாட்டுப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் ராயப்பன், மீனவர் சங்க நிர்வாகிகள் கணபதி, ஜாகீர் உசேன், பாலசுப்ரமணியன், பாலன், ஜாகீர் உசேன், ராஜேந்திரன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!