களத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு இளைஞர்கள்..

கடந்த இரண்டு நாட்களாக கீழக்கரை,  வண்ணாங்குண்டு பகுதியில் மழை பெய்து வருகிறது. ஆனால் வண்ணாங்குண்டில் மழை நீர்  ஊர் பெரிய ஊரணிக்கு செல்ல போதுமான வழிகள் இல்லாத காரணத்தால் வீணாகும் சூழல்.

இதை கருத்த்தில் கொண்ட வண்ணாங்குண்டு பொதுமக்கள் மற்றும் லஜ்னத்துல் இர்ஷாத் வாலிப நண்பர்கள் தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்த தடுப்புகளை கொட்டும் மழை என்று பாராமல் மழையோடு மழையாக  சரிசெய்து தற்போது ஊருக்குள் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தேங்கி உள்ள மழை நீர் பெரிய ஊரணிக்கு செல்லும் வழியை உண்டாக்கினர்.

இதுபோல் அனைத்து ஊர்களிலும் மழை வருவதற்கு முன்பே நீர் செல்லும் பாதைகளை சரி செய்தால், மழை நீர் வீணாவதை தடுக்கலாம்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…