நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம்..

நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் 02/10/18 இன்று காலை பெருந்தலைவர் காமராஜர் திடலில் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டத்திற்கு திரு.சீ.தங்கஇசக்கி தலைமை தாங்கினார்.

நிகழ்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சு.கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் திரு.குருசாமி, வேளாண்மை உதவி அலுவலர், ஊராட்சி செயலர் லட்சுமணன், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதி அமர் சேவா சங்க பொறுப்பாளர் திரு.கனகராஜ், செய்தி தொடர்பாளர் திரு.அபுபக்கர்சித்திக், பல்வேறு அரசியல் கட்சியினர் ஊரின் முக்கிய பிரமுகர்கள்,
மாற்றுத்திறனாளிகள் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், ஊராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவி குழுக்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடைசெய்வது, பொதுசுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர், ஊராட்சியால் நிறைவேற்றப்படும் வளர்ச்சிப்பணிகள், அரசின் இதர திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு மிக முக்கிய அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிராமசபையின் போது கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது. கிராமசபை கூட்டத்தை வீரசிகாமணி ஊராட்சி செயலர் லட்சுமணன் நெறிப்படுத்தினார். மேலும் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வரவுசெலவு குறித்த அறிக்கையை பொதுமக்களுக்கு வாசித்து காட்டியதுடன்,அது தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு கனிவுடன் பதிலளித்தார்.

பலதரப்பட்ட மக்களும் அதிக அளவில் கலந்து கொண்ட முதல் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பை இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் அனைவரிடமும் தீர்மான பதிவேட்டில் கையொப்பம் பெறப்பட்டது. கிராமசபைக்கு தலைமை தாங்கிய திரு.சீ.தங்க இசக்கி  சிறந்த முறையில் கிராம சபை நடந்திட ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தி:- அபுபக்கர்சித்திக், வீரசிகாமணி

செய்தி தொகுப்பு :-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ்
( பூதக்கண்ணாடி மாத இதழ் )

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..