கீழைநியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீட்டில் முத்தாய்ப்பாய் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படுகிறது…

“வாசிப்பே சுவாசிப்பு”, இளைய தலைமுறை நவீன இயந்திர வாழக்கையில் மூழ்கி இருக்கும் வேலையில் வாசித்தலே வாழ்கையை மேம்படுத்தும் என்பதை வலியுறுத்தும் விதமாக கீழை மீடியா அட்வர்டைஸ்மண்ட் நிர்வாக இயக்குனர் மற்றும் கீழைநியூஸ் நிர்வாக உறுப்பினர் கீழை.முசம்மிலின் அதீத முயற்சியுடன் வெளியிடப்படுவதுதான் வி.எஸ்.முஹம்மத் அமீன் எழுதிய “ஆன்மீக அரசியல்” மற்றும் ஆரூர் புதியவன் என அழைக்கப்படும் ஹாஜா கனி எழுதிய “காயம்பட்ட காலங்கள்”.

இதில் ஆன்மீக அரசியல் இன்று நடைமுறை வாழ்கையில் அரசியல் என்பதின் புனித தன்மை மாற்றப்பட்டு சுயநலத்திற்காக அரசியல் எவ்வாறெல்லாம் வளைக்கப்படுகிறது என்பதை மிகவும் நோ்த்தியாகவும் ஆசிரியர் தன் வார்த்தை எனும் சாட்டையால் நாட்டின் பிரதமர் முதல் இன்றைய நடிகர்கள் வரை அரசியலில் செய்யும் நாடகத்தை தனக்கே உரித்தான வகையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தந்துள்ளார்.

அதே போல் எழத்தாளர் ஆரூர் புதியவன் எனும் ஹாஜா கனி இளைய தலைமுறை மத்தியில் தன்னுடைய உற்சாகமூட்டும் கவிதைகளாலும், எழுச்சி ஊட்டும் பாடல் மற்றும் மேடைப் பேச்சுக்களாலும் மிகவும் பரிச்சயமானவர். இவரின் “காயம்பட்ட காலங்கள்” கடந்த இரண்டு வருடங்களாக பிரபலமான பத்திரிக்கையில் அவர் தலையங்கமாக எழுதிய தொகுப்பு, இதில் அவர் கடந்த இரண்டு வருட காலங்களில் நடந்த நிகழ்வுகளை ஆழமாக பதிந்துள்ளார். இவரின் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியவர்கள் குறிப்பிடுவது போல் நிச்சயமாக இது ஒரு வரலாற்று ஆவணம்தான்.

இந்த இரண்டு புத்தகங்களும் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவரும், சமூக ஆர்வலரும், சமூக சிந்தனையாளர்களுமான தோழர்.நல்லக்கண்ணு, பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ், பேராசிரியர்.சுப.வீர பாண்டியன், தோழர்.த.லெனின், டாக்டர். கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, எஸ்.என்.சிக்கந்தர், கவிஞர் யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் வாழ்த்துரையுடன் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து கீழை பதிப்பகத்தின் நிறுவனர் மற்றும் கீழை மீடியா அட்வர்டைஸ்மன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கீழை.முசம்மில் மற்றும் சென்னை நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் கீழைநியூஸ் நிர்வாக உறுப்பினர் சாலிஹ் ஹீசைன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

மேலும் நிகழ்ச்சியின் ஏற்புரையை புத்தகங்களின் ஆசிரியர்கள் வி.எஸ். முஹம்மதி அமீன் மற்றும் பேரா.முனவைர்.ஹாஜா கனி (ஆரூர் புதியவன்) ஆகியோர் வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 30ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 05.00 அளவில் திருவெல்லிகேணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள BM கன்வென்ஷன் ஹாலில் நடைபெற உள்ளது.