Home செய்திகள் இமானுவேல்சேகரன் 61 வது நினைவு தினம்.. அரசியல் தலைவர்கள் அஞ்சலி .. பலத்த பாதுகாப்பு .. புகைப்படங்கள் ..

இமானுவேல்சேகரன் 61 வது நினைவு தினம்.. அரசியல் தலைவர்கள் அஞ்சலி .. பலத்த பாதுகாப்பு .. புகைப்படங்கள் ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் 61 வது நினைவு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தைப்பேட்டை அருகே இமானுவேல் சேகரன் நினைவிடம் உள்ளது. இங்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையொட்டி மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அஞ்சலி வருவோர் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமள வர வேண்டும். வாடகை வாகனங்கள், திறந்தவெளிவாகனங்களில் வரக்கூடாது. வாகனங்களில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது. ஒலி பெருக்கிகள் வைத்துக்கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளில்லா உளவு விமானம் மூலம் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக காவல் கூடுதல் டிஜிபி விஜயகுமார், தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், .ராமநாதபுரம் டிஐஜி காமினி, எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா உள்பட ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இமானுவேல் சேகரன் நினைவிடமான அவரது சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது மகள் ஜான்ஸி ராணி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இன்னும். பல முக்கிய தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர்          காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள்   சுப தங்கவேலன், தமிழரசி ரவிக்குமார், சத்யமூர்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திசைவீரன், முருகவேல், மாநில வர்த்தக அணி செயலாளர் ராமர், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்ப ராகு, பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி, பரமக்குடி இளைஞரணி செயலாளர் சம்பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் பரமக்குடி ஜெயக்குமார், முதுகுளத்தூர் பூபதிமணி, நயினார்கோயில் சக்தி, மண்டபம் ஜீவானந்தம், பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், அருளானந்து,  அபிராமம்  பேரூர் செயலாளர் ஜாஹீர் உசைன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மனோகரன் உள்ளிட்ட ஆயிரக் கணக்காண தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க சார்பில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா ,முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தேமுதிக சார்பில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து இமானுவேல் சேகரன நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சி தென் மண்டல செயலாளர் வெற்றிக்குமரன் தலைமையில் அக் கட்சியினர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் களஞ்சியம் சிவக்குமார், மாநில இளைஞர் பாசறை செயலாளர் சாரதி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெண்குளம ராஜ், நகர் பொறுப்பாளர்கள் அகரம் முதல்வன்( ராமநாதபுரம் ), ஜஸ்டீன் (பரமக்குடி), தமிழ் வேந்தன் ( சத்திரக்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் கலைவேந்தன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வீர வணக்க கோஷம் எழுப்பினர்.

தமாகா சார்பில் முன்னாள் எம்பி ராம் பாபு, மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்எல்ஏ ராம் பிரபு உள்பட பலர் மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் டி டிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைப்பு செயலாளர்கள் வ.து. நடராஜன், வழக்கறிஞர் கவிதா சசிகுமார், முனியசாமி, பரமக்குடி எம் எல் ஏ முத்தையா, மண்டபம் ஒன்றிய செயலர் ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாஜக சார்பில் எஸ்சி., எஸ்டி ஆணையத் தலைவர் முருகன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை தலைவர்கள் சுப.நாகராஜன், குப்புராமு, மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலர் ஆத்ம கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜக சார்பில் எஸ்சி., எஸ்டி ஆணையத் தலைவர் முருகன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை தலைவர்கள் சுப.நாகராஜன், குப்புராமு, மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலர் ஆத்ம கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தேவேந்திர குல வேளாளர் சமுதாய இளைஞர்கள் அலகு குத்தி ஊர்வலம் வந்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!