வீழ்ச்சியை நோக்கி செல்லும் இந்திய பண மதிப்பு.. வெளிநாட்டு மக்களுக்கு சந்தோசம்.. ஆனால் உள்ளூர் வாசிகளுக்கு திண்டாட்டம் ..

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தின் உச்சமாக அமெரிக்க டாலருக்கு நிகராக ₹.70.16 அளவைத் தொட்டுள்ளது.

அதே போல் அமீரக திர்ஹத்தின் மதிப்பு ₹.19.1049 என்ற அளவையும், அரேபிய ரியாலின் மதிப்பு ₹.18.71 என்ற அளவைத் தொட்டுள்ளது.  இதனால் அமீரகம் மற்றும் சவுதியில் உள்ளவர்களுக்கு சொந்தங்களுக்கு அதிகமான தொகை அனுப்பலாம் என்ற சந்தோஷத்தை தந்துள்ளது.

ஆனால் பண மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கட்டுக்கடங்காமல் கிடுகிடு என உயரும் வாய்ப்புள்ளது.  அதே போல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும்.

நிச்சயமாக இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு பேராபத்துதான் என்பதில் ஐயமில்லை.