சோழந்தூர் அருகே மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடித்திருவிழா!..

இராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் அருகே  அண்ணாமலைநகரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

இராமநாதபுரம் தேவிபட்டினம் அருகேயுள்ள சோழந்தூர்   அண்ணாமலைநகரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த ஜுலை 31ல் காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்திருவிழா கடந்த7ம் தேதி நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பிள்ளையார் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்தும் மாசாணி அம்மன் கோயில்    பூசாரி அருள்வாக்கு அனுசயா வேல் ஏந்தி அம்மன் அருள் இறங்கி ஆவேசத்துடன் ஊரின் முக்கியவீதிகள் வழியாக வர ஆங்காங்கே வீடுகளில் இருந்த பக்தர்கள் அருள்வாக்கு அனுசியாவை வணங்கி விபுதி வாங்கினர். பால்குடம் ஏந்திவந்த பக்தர்களும் பின்னால் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் இரவு முளைப்பாரி எடுத்தும் வந்தனர்.       இரவில் கும்மிபாட்டு, ஒயிலாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அருள்வாக்கு அனுசியாவிடம் அருளாசி பெற்று அருள்வாக்கு பெற்று பலனைடந்த பக்தர்கள் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாக பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை தலைவர் பதினெட்டான், முன்னாள் தலைவர் முருகன், துணைத்தலைவர் சேகர், செயலாளர்   பூமிநாதன், துணை செயலாளர் தங்கவேலு, பொருளாளர்.  கோவிந்தன், ஆசிரியர்    மூவேந்திரன் உட்பட  ஊர் மக்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பபட்டது.