Home செய்திகள் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிப்பு. மீட்புக்குழு ஆகஸ்ட் மாதம் இலங்கை பயணம்…

இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிப்பு. மீட்புக்குழு ஆகஸ்ட் மாதம் இலங்கை பயணம்…

by ஆசிரியர்

இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் 183 படகுகளையும் அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து அவற்றை மீட்பதற்கான குழுவினர் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்ல இருப்பதாக மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குநர் ஜானி டோம் வர்கீஸ் இராமநாதபுரத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது., “இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளில் விசைப்படகுகள் 160ம், நாட்டுப் படகுகள் 23 ம் உட்பட மொத்தம் 183 விசைப்படகுகளை விடுவிக்குமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் படகுகள் என்ன நிலைமையில் இருக்கின்றன. அவற்றை மீட்டு இந்தியா கொண்டு வர முடியுமா என ஆய்வு செய்து அதனைக் கொண்டு வர ஒரு மீட்புக் குழு உருவாக்கப்படும். பின்னர் அக்குழுவினர் ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று விடுவிக்கப்பட்ட படகுகளில் எவற்றை இந்தியா கொண்டு வர முடியுமோ அவற்றைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மீட்புக் குழுவான இலங்கைக்கு எனது தலைமையில் ஆகஸ்ட் மாதம் செல்ல இருக்கிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக கொச்சினில் உள்ள அரசுக்கு சொந்தமான படகு கட்டும் தளத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுள் 7, அதே கொச்சினில் மற்றொரு இடத்தில் 7 படகுகள், ராமேசுவரம் தீவு அருகே குந்துகாலில் தனியார் நிறுவனம் சார்பில் 10 படகுகள்,நாகப்பட்டிணம் மற்றும் குஜராத்தில் தலா 3 படகுகள் வீதம் மொத்தம் 39 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

ஆழ்கடல் மீன்பிடிக்கும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒரு படகு கட்ட மொத்தச் செலவு ரூ.80 லட்சமாகும். இத்தொகையில் 40 லட்சத்தை மத்திய அரசும்,16 லட்சத்தை மாநில அரசும் இணைந்து செலுத்தி விடும்.இந்த 56 லட்சம் போக மீதம் உள்ள 16 லட்சத்தை சம்பந்தப்பட்ட மீனவர் வங்கியில் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.இவற்றைப் பெற ஒரு மீனவர் தனது பங்களிப்பாக ரூ.8 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும்.மீனவர்களின் நலனுக்கா க ரூ.56 லட்சத்தை மானியமாக ஒரு ஆழ்கடல் மீன் பிடி படகு கட்ட வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் தொடங்கி விட்டால் தடை செய்யப்பட்ட இழுவலையால் மீன்பிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்கவே இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்ட மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 17 பேருக்கு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் மூலமாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.போன்ற பணிகளுக்கான தேர்வுகளை எழுதும் வகையில் 6 மாத சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இப்யிற்சியானது கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்திய கடலோரக் காவல்படையில் சேருவதற்காக 33 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ராமநாதபுரம் அருகே பிரப்பன் வலசையில் கடல் சார்ந்த அரசுப்பணிகளில் சேரும் வகையில் ஒருமாதப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன்,கூடுதல் இயக்குநரின் நேர்முக உதவியாளர் க.முருகேசனும் உடன் இருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!