சவுதி அரேபியா ஜித்தாவில் இஃப்தாருக்கு ஒன்று கூடிய தமிழ் சமுதாயம்….

சவுதி அரேபியா ஜித்தா மாநகரத்தில் கடந்த 25/5/2018 அன்று ( IPP ) இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சியில் தலைமை உரை சகோதரர் அப்துர்ரஹமான் உரையாற்றினார். ரியாத் மண்டல இலக்கிய அணி  செயலாளர்  பேராசிரியர் அப்துல் ஹக் பித்ரா மற்றும் ஜகாத் தொடர்பாக சிற்றுரையாற்றினார். அதைத் தொடர்ந்து மொளவி அப்துல் மஜீத் மஹ்லரி “அள்ளி கொடுப்போம் ரமலானில்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மௌளவி அப்பாஸ் அலி, MISC “நவீன கொள்கை குழப்பம்@ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அப்துல் மஜீத், மாநகர செயலாளர் ராஜாமுஹம்மது , மாநகர துனை செயலாளர் இலியாஸ், ஆலோசகர் அதிரை நைனா, கிளை பொறுப்பாளர்கள்  ஜலால், பரக்கத் அலி, ரிள்வான் சமீர், கலிஃபத், முஷ்டாக், அப்துல் ஹலீம் மற்றும் சமுதாய மக்கள் 200 க்கும் மேற்பட்டோர்  பெண்கள் உள்பட கலந்து கொண்டு   சிறப்பித்தார்கள்.  மாநகர துனை செயலாளர் இலியாஸ் நன்றியுரையுடன் (துவாவுடன்) நிகழ்ச்சி முடிந்தது.