தூத்துக்குடி அராஜகம் – பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் கண்டனம்..

கடந்த பல வருடமாக தூத்துக்குடி ஸ்டார்லெட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் அறப்போராட்டம், இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கால் போர்க்களமாக மாறியது.  இச்சம்பவத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்கால சந்ததியனருக்காக போராடிய மாணவி உட்பட அப்பாவி மக்கள் 12 பேர் ஈவு, இரக்கம் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதற்கு காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களின் போக்கை கண்டித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மு.சிவதமிழவன், தலைவர் .தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (2963/CNI), வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தொடர்ந்து ஓராண்டாக தமிழகம் பல்வேறு போராட்ட களமாக மாறி உள்ள சூழ்நிலையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழுவதாக ஆளும் அரசு மார்தட்டி பேசுகிறது. ஆனால்  நேற்று முன்தினம் தூத்துக்குடியில் அறப்போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்களை கொன்று குவித்துள்ள சம்பவம் இன்று தமிழகம் முழுவதும் போராட்டமாக வெடிக்க நேர்ந்துள்ளதை.  இந்த போராட்டத்தின் எதிரொலியால் நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாததால் அரசும் காவல்துறையும் திணறுவதை அறிந்து தமிழகத்தில் உடனடியாக கவர்னர் ஆட்சியை அமுல்படுத்தும் ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே பொதுமக்கள் பொறுமை இழந்து ஒட்டுமொத்த தமிழகப்போலீசாரையும் தாக்கப்பட்டு தழிழகத்தில் இரத்த ஆறு ஓடுவதை அரசு வேடிக்கை பார்க்க வேண்டுமா? அதற்கு முன்பு நீதிமன்றங்களே தன்னார்வ வழக்காக தமிழ்நாட்டில் அமைதி திரும்பிட கவர்னர் ஆட்சியும் அதனைத் தொடர்ந்து சட்டசபை பொதுத் தேர்தலும் நடத்திட நீதிமன்ற தீர்ப்பையும், ஜனாதிபதி அறிவிப்பையுமே தற்போது தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கறார்கள். இந்த முடிவு ஓரிரு நாட்களில் தமிழகம் சந்திக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இதற்கு மு.க.ஸ்டாலின் கைதும் – தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்களே வித்திட்டுள்ளது எனலாம்” என அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image