வேதாளை ஊராட்சியில் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவை கொடியேற்று விழா..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சியில் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் கொடியேற்று விழா நடை பெற்றது.

இவ்விழாவில்   வேதாளை ஊராட்சி கழக செயலாளர்            லெட்சம் முகம்மது இபுறாம் ஷா தலைமை தாங்கினார்.  மேலும் இவ்விழா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேலு, ஒன்றிய செயலாளர் நசீர் கான் ஒன்றிய துணைச் செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை  மண்டபம் நகர் செயலாளர் ரகுமத்துல்லா வரவேற்று பேசினார்.  விழாவில் மாவட்ட செயலாளர் சசி (என்ற) மங்களநாதன்  கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் இராமேஸ்வரம் நகர் செயலாளர் செந்தில் முருகன், சாத்தக்கோன் வலசை ஊராட்சி கழக செயலாளர் ராஜீ, மரைக்காயர் பட்டிணம் ஊராட்சி கழக செயலாளர் இபுறாம் ஷா, செயலாளர் அலியார், மண்டபம் நகர் பொருளாளர் சேகு மீராசா, மண்டபம் 1வது வார்டு செயலாளர் பூமணி, குஞ்சார் வலசை கிளை கழக செயலாளர் துரைப்பாண்டி, வலையர்வாடி கிளை கழக துணை செயலாளர் பிச்சை, நம்புச்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழா முடிவில் வலையர்வாடி கிளை கழக செயலாளர் பக்கீர் நன்றி கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.