தொடரும் பாரம்பரியம்.. புதுப்பொலிவுடன் இராமநாதபுரம் “பசீர் பேன்ஸி ஸ்டோர்”…

இராமநாதபுரம் சாலைத் தெருவில் (அறிஞர் அண்ணா சாலைத் தெரு) புத்தம் புது பொலிவுடன் “பசீர் பேன்ஸி ஸ்டோர்” ஞாயிறு (13-05-2018) அன்று திறக்கப்பட்டது. “பசீர் பேன்ஸி ஸ்டோர்” கிட்டத்தட்ட 50 வருட பாரம்பரியம் கொண்டது.

பல வருடங்களுக்கு முன்னாள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக இருந்த இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டது.  பின்னர் 25 வருடங்களுக்கு முன்னர் வியாபார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரண்மனை பகுதியில் தொடங்கப்பட்டது.

இரண்டாவது தலைமுறையால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.  இன்று எத்தனையோ நவீன அங்காடிகள் சந்தையில் வந்தாலும், பழைய பேருந்து நிலையத்தில் நிறுவனம் இருந்த காலம் முதல் இன்று வரை தொடர்ந்து வருகை தரும் வாடிக்கையாளர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழிலில் இரண்டு தலைமுறையாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் தரத்தோடும் தொடர்வதற்கு முக்கிய காரணம் “நம்பிக்கை மற்றும் நாணயம்” என்றால் மிகையாகாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.