கீழக்கரை இளைஞர்களின் மற்றொரு முயற்சி “TRUTH MISSING” – குறும்படம்

கீழக்கரை இளைஞர் முஸ்தபா மற்றும் அவருடைய நண்பர்கள்  சில மாதங்களுக்கு முன்பு சிறு விழிப்புணர்வு குறும்படத்தை எடுத்து வெளியிட்டு இருந்தார். இப்பொழுது அதைத் தொடர்ந்து “TRUTH MISSING”  என்ற குறும்படம் மூலம் வெள்ளை சீனி மற்றும் மைதாவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்களை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த 15 நிமிட குறும்படத்தை எடுத்துள்ளார்கள்.

அதீ நவீன பொருட்கள் இல்லாமல் மிக எளிதான முறையில் இந்த குறும்படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்கள். இன்னும சிரத்தை எடுத்து இன்னும் பல விசயங்களை தயார்ப்படுத்தி குறும்படங்கள் எடுத்தால் முறை சார்ந்த குறும்படங்களுக்கு நிகராக எடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

இந்த படக்குழுவில் மாலிக், முர்சல், காதர், சல்மான், சுஹைல், ஆசிஃப், ஜாகிர்தீன், அமீன், காசிம் மற்றும் ஹாஜி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

சமுதாயத்திற்க நன்மை பயக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த இளைஞர்களை கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.